‘‘20 வயதில் நடிகையாவது பெரிய விஷயமில்லை… 20 வருஷமா ஹீரோயினாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வதுதான் பெரிய விஷயம்’’ என த்ரிஷா குறித்து நடிகை விஜய் ஒபனாக பேசினார். இந்த நிலையில்தான் நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியிருப்பதாக தகவல்கள் கசிகிறது.

கடந்த 2000 ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். தென்ந்தியாவின் ராணி என்று அழைக்கப்படும் த்ரிஷா, மௌனம் பேசியதே தொடங்கி சமீபத்தில் வெளியான லியோ வரை ஹீயோனாக கலக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்து வரும் த்ரிஷா அந்த படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்திய த்ரிஷா, சமீபத்தில் வெளியான லியோ படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, குருவி பல படங்களில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.

விஜய் மட்டுமின்றி, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் தக் லைஃப் போன்ற படங்களிலும் த்ரிஷா நடிக்க உள்ளார். இதன் மூலம் கோலிவுட்டில் அதிகம் தேடப்படும் நடிகைகளில் ஒருவராக த்ரிஷா மாறி உள்ளார்.

இந்த நிலையில் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி த்ரிஷா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. மேலும் அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.10 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ் படங்கள் தவிர ராம் என்ற மலையாள படத்திலும் த்ரிஷா நடிக்க உள்ளார். மேலும் இந்த ஆண்டு ஓடிடி தளத்திலும் த்ரிஷா அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal