பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவி ரச்சிதாவை பிரிந்த கதை குறித்து பேசி இருந்தார். இந்த நிலையில் சில நாட்களாக எந்த பதிவும் வெளியிடாமல் இருந்த ரச்சிதா இன்று தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எமோஷனலான போஸ்ட் ஒன்றை போட்டு இருக்கிறார்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை ரச்சிதா. சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமாக இருந்தாலும் அவர் முதல் முதலாக தமிழில் அறிமுகமானது பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் தான். சின்னத்திரையில் இருந்து இவ்வளவு பிரபலமாகவும், அதிகமான ரசிகர்களைக் கொண்டவர் ரச்சிதா!

இந்த நிலையில் அந்த சீரியலில் கதாநாயகனாக இருந்த தினேஷை காதலித்து திருமணம் செய்திருந்தார். மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து இருந்தனர்.

ஏற்கனவே பிக்பாஸில் நடிகை ரச்சிதா கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடத்தார். இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக தினேஷ் ஆரம்பத்திலேயே கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது நடக்காமல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ் உள்ளே நுழைந்திருக்கிறார். நேற்று டாஸ்க் ஒன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்தது. அதில் தங்கள் கடந்து வந்த பாதையை குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தினேஷ் நான் என்னுடைய வாழ்க்கையில் பெரிய இக்கட்டான சூழ்நிலையை சந்தித்தது என்றால் அது என்னுடைய மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனை தான்.

நாங்கள் இருவரும் பிரபலங்கள் என்பதால் இருவர் பற்றிய அடையாளமும் அனைவருக்கும் தெரியும். எல்லா கணவன் மனைவிக்கும் ஏற்படுவது போற்றுதான் சில பிரச்சனைகள் எங்களுக்கும் ஏற்பட்டது. அதில் ஈகோ காரணமாக இருவருமே நாங்கள் சரியாக முடிவை எடுக்காமல் விட்டு விட்டோம். அது ஒரு கட்டத்தில் பெற்றோர்களாலும் தீர்த்து வைக்க முடியாத அளவிற்கு கைமீறி போய்விட்டது. நான் அந்த கஷ்டத்தில் ரொம்பவே மனம் உடைந்து போய் இருந்தேன். நான் மட்டுமல்ல என்னுடைய மனைவியும் அப்படித்தான் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையிலே நான் சந்தித்த மோசமான கஷ்டங்கள். அந்த நேரங்கள்தான் இன்னமும் அந்த நிலைமையில் தான் இருக்கிறேன். அது சீக்கிரமாக மாறும் என்று நம்புகிறேன் என்றும் அந்த டாஸ்க்கில் தினேஷ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரச்சிதா இன்று தன்னுடைய அம்மாவுடன் ஈஷா மையத்திற்கு சென்றிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். கூடவே அதற்கு உருக்கமான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார். அதில் ‘‘வலியின் குணம் வலியில் இருக்கிறது…. இதுதான் வாழ்க்கையில் இறுதியான உண்மை.. உங்களுடைய வாழ்க்கையை ஆன்மீக ரீதியில் மறு தொடக்கம் செய்யுங்கள்.. நான் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டுமானால் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பது தான் இப்போது விருப்பமாக இருக்கிறது’’ என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் தினேஷ் கருத்துக்கு ரச்சிதா ஏதேனும் மாற்றுக் கருத்து சொல்ல இருக்கிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal