நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது புகைப்படக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற புடவையில் அழகில் மிரட்டும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதற்கு ‘அழகினால் எங்களை கொல்லாதீர்கள் ராணி’ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal