Month: June 2025

திருமாவுடன் அதிமுக ‘மாஜி’ சந்திப்பு! கூட்டணி களம் மாறுமா?

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சந்தித்து அரை மணி நேரம் பேசியதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. விசிக தலைவர் திருமாவளவனிடம் தான் எழுதியுள்ள “பேசு பேசு நல்லா…

ஆயுதப்படை எஸ்.பி., அருண் ராஜினாமா! தமிழக அரசு ஏற்பு!

தமிழக காவல்துறை ஆயுதப்படை எஸ்பி அருண் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து தமிழக அரசு அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்று அவரை காவல்துறையில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்தவர் அருண். இவர் கடந்த…

காவல்துறையை காப்பாற்றாத ஸ்டாலின்! ராஜினாமா செய்வாரா? Dr.சரவணன் ஆவேசம்!

‘‘எடப்பாடியார் கூறியது போல இந்தியாவில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது இதுதான் ஸ்டாலின் திராவிட மாடலா? தன் துறையின் கட்டுபாட்டில் உள்ள காவல் நிலையத்தையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய…

பா.ம.க. பொ.செ. நீக்கம்! அன்புமணி சமரச முயற்சி?

பா.ம.க. பொதுச் செயலாளர் நீக்கப்பட்ட நிலையில், டாக்டர் ராமதாஸுடன் அன்பு மணி சமரசத்திற்கு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், தன் ஆதரவு நிர்வாகிகளுடன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அவரால் புதிதாக நியமிக்கப்பட்ட, 42 மாவட்ட…

‘எங்கள் கூட்டணியில் இபிஎஸ்தான் முதல்வர்!’ நயினார் ‘நறுக்’ பதில்!

“எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும். அதேநேரத்தில், அதிமுக பழனிசாமிதான் முதல்வர்.” என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ‘நறுக்’கென்று பதில் அளித்திருக்கிறார். திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில், ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து…

விமான விபத்தில் பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, மேலும் ஒரு உடல் விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. பிஜி மருத்துவக் கல்லூரியில்,…

காவல் நிலையத்துக்கே பாதுகாப்பில்லை! திமுகவின் சாதனை!

‘‘தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கே பாதுகாப்பில்லை. இதனை தி.மு.க.,வின் 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ மதுரை மாவட்டம்…

தமிழகம் வந்த அமித் ஷாவை வரவேற்ற ரவுடிக்கு சிறை!

பணமோசடி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், ரவுடியுமான ‘மிளகாய் பொடி’ வெங்கடேசன் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேர்த்து 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை…

ஸ்டாலினின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பு! உற்சாகத்தில் உ.பி.க்கள்!

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பின் மூலம் கட்சி நிர்வாகிகள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பு மூலமாக நேற்று பேசினார். அப்போது…

‘முருகன் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி!’ எச்சரித்த தமிழக பாஜக!

‘‘மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள…