பா.ம.க. பொதுச் செயலாளர் நீக்கப்பட்ட நிலையில், டாக்டர் ராமதாஸுடன் அன்பு மணி சமரசத்திற்கு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், தன் ஆதரவு நிர்வாகிகளுடன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அவரால் புதிதாக நியமிக்கப்பட்ட, 42 மாவட்ட செயலர்கள், 33 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ல் நடக்கும் மகளிர் சங்க மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், இன்று தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், ராமதாஸ் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டங்கள் முடிந்ததும், பொதுக்குழுவை கூட்டும் முடிவில் ராமதாஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கேற்றவாறு, கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கி விட்டு, முரளி சங்கர், 35, நியமிக்கப்படுவதாக ராமதாஸ் நேற்று அறிவித்தார். அன்புமணி ஆதரவாளராக வடிவேல் ராவணன் மாறியதால், இந்த முடிவை ராமதாஸ் எடுத்துள்ளார்.