தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சந்தித்து அரை மணி நேரம் பேசியதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விசிக தலைவர் திருமாவளவனிடம் தான் எழுதியுள்ள “பேசு பேசு நல்லா பேசு” புத்தகத்தை வழங்கிய வைகை செல்வன் வழங்கியிருக்கிறார். திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த சந்திப்பில் நடப்பு அரசியல் குறித்து கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக இருவரும் பேசியிருக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலைப் போல் குறைவான தொகுதிகளைப் பெறமாட்டோம் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது!