Month: November 2024

தூத்துக்குடியில் உதயநிதி! இளைஞர் அணியினர் உற்சாக வரவேற்பு!

தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சரான பிறகு முதன் முறையாக தூத்துக்குடிக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்தார். தூத்துக்குடிக்கு வருகை தந்த உதயநிதிக்கு இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் இளைஞரணியினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினார்கள்.…

மருத்துவருக்கு கத்திக்குத்து! களத்தில் உதயநிதி ஸ்டாலின்..!

“சென்னை மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினருடன் இன்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடபடவுள்ளதாக,” துணை முதல்வர் உதயநிதி…

நவ. 20 திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!

வரும் 20-ம் தேதி (நவ.20) மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்…

‘விஜய் செயல்பாட்டில் தெளிவில்லை!’ எச்.ராஜா பகீரங்க குற்றச்சாட்டு!

‘த.வெ.க. தலைவர் விஜய் செயல்பாட்டில் தெளிவில்லை’ என பா.ஜ-.க. ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியிருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தமிழக பா.ஜ.க, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில், 10,000 பள்ளி ஆசிரியர்கள் போலியாக இருப்பது மட்டுமல்ல; தமிழகம்…

2026ல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் திமுக! Dr.சரவணன் பகீர் தகவல்!

‘‘தி.மு.க. தலைமையிலான அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் வஞ்சித்து வருகிறது. 2026ல் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கு கூட இழக்கும்’’ என டாக்டர் சரவணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அ.தி.மு.க. மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் மதுரை டாக்டர் சரவணவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் ஏறத்தாழ அரசு…

பூசாரி தற்கொலை? தப்புவாரா ஓ.ராஜா? இன்று தீர்ப்பு!

தேனி மாவட்டத்தில் கோயில் பூசாரி இறந்த விவகாரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் தம்பி ஓ.ராஜா உள்பட 6 பேர் மீதான வழக்கில் இன்று திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ்…

மேம்பால முறைகேடு வழக்கு! உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில், 115…

விஜய்க்கு விரைவில் மன மாற்றம்! கே.பி.முனுசாமி நம்பிக்கை!

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் சிந்தனையில் மனமாற்றம் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று (நவம்பர் 11-ம் தேதி) இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார். முன்னதாக…

‘விலையில்லா விருந்தகம்’ அகற்றம்! தவெகவுக்கு திமுக நெருக்கடி?

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சுமார் 150 நாட்களாக செயல்பட்ட விலையில்லா விருந்தகம் மதுரை மாநகராட்சியால் அகற்றப்பட்டதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரையில் தவெக சார்பாக விலையில்லா விருந்தகம் மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமையில் நாள் ஒன்றுக்கு…

‘எமிஸ்’ பணிகளுக்கு 6 ஆயிரம் பேர் நியமனம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

பள்ளிக்கல்வித்துறையில் எமிஸ் பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்துவைத்து…