‘‘தி.மு.க. தலைமையிலான அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் வஞ்சித்து வருகிறது. 2026ல் எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கு கூட இழக்கும்’’ என டாக்டர் சரவணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அ.தி.மு.க. மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் மதுரை டாக்டர் சரவணவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘தமிழகத்தில் ஏறத்தாழ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 16 லட்சம் பேர் உள்ளார்கள். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்

அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்துவோம். தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும். 70 வயது கடந்த ஓய்வூதாரருக்கு 10% ஓய்வூதியம் .உயர்த்தி வழங்கப்படும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தத்துவத்தின்படி ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்படும். அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு அரசு ஊழியராக்கப்படுவார்கள். 5.50 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

இதைச் சொல்லித்தான் அரசு ஊழியர்களின் 16 லட்சம் ஓட்டுகளைப் பெற்றது. குறிப்பாக அதிமுக 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 93,000 வாக்கு பெற்று இருந்தால் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கும் இதில் 3 லட்சம் அரசு ஊழியர்கள் திமுக எதிராக வாக்களித்தால் இன்றைக்கு அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும்.

இதற்கிடையே 2022 ஆண்டு பிடிஆர் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்த பொழுது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் ஓராண்டு ஒரு நபருக்கு இரண்டு லட்சம் செலவாகும், ஆனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஒரு நபருக்கு 50,000 தான் செலவாகும் ஆகவே இது சாத்தியப்படாது என்று கூறினார்.

அதனை தொடர்ந்து நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொள்வதாக கூறுகிறார். தற்போது அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் பஞ்சாப், கர்நாடகா, இமாசல பிரதேஷ் ஆகிய ஏழு மாநிலங்கள் செயல்படுத்து வருகிறது இந்தியாவிலேயே முதன்மையாக தமிழகம் திகழ்கிறது என்று கூறும் ஸ்டாலின் தமிழகத்தில் அவர் நினைத்தால் உடனே செயல்படுத்தி விடலாம்.

சென்னையில் 42 கோடிக்கு கார் ரேஸ் நடத்துகிறார் அதற்கு பணம் உள்ளது, மதுரையில் 215 கோடியில் நூலகம் கட்டுகிறார் அதற்கு பணம் உள்ளது கோடிக்கணக்கில் விளம்பரம் செய்ய பணம் உள்ளது ஆனால் அரசு ஊழியருக்கு பணம் இல்லை.

மேலும் 24 மாத கால அகவிலைப்படி முடக்கினார்கள். அரசு ஊழியர்கள் ஆசிரியர் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை முடக்கினார்கள். கருணை அடிப்படையான பணி நியமனத்தை 25 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து இந்த கருணை இல்லாத அரசு உள்ளது.

அரசு ஊழியர்களின், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசு தவறுதலாக கையாண்டு வருகிறது. ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்புவோம் என்று கூறினார்கள் ஆனால் இன்றுவரை 26,000பணிகள் தான் நிரப்பப்பட்டு உள்ளது.

மருத்துவ துறை எடுத்துக் கொண்டால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 31,250 பணியிடங்கள் நிரப்பப்பட்டது தற்பொழுது 32 ஆயிரம் காலி பணியிடம் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது எங்கள் குறைகளை தீர்ப்போம் என்று கூறிய ஸ்டாலின் தற்போது எங்கே மீண்டும் நாங்கள் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்குவோம் என்று கூறுகிறார்கள் நிச்சயம் செய்ய முடியும் என கொந்தளிப்பு நிலையில் உள்ளார்கள் அரசு ஊழியர்கள்.

2026ல் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிதான் 2011ல் நடந்தது போல், எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்கும்’’ என்று கூறியிருக்கிறார் டாக்டர் சரவணன்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal