Month: September 2024

‘துணை முதல்வர்’ பதவியல்ல; பொறுப்பு! உதயநிதி பதிவு..!

‘துணை முதல்வர்’ என்பது பதவியல்ல; பொறுப்பு. இணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான்…

த.வெ.க. முதல் மாநாடு! தொண்டர் களுக்கு நேரில் அழைப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாட்டுக்கு வருமாறு மாவட்டம்தோறும் நேரடியாகச் சென்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்.27-ம் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான…

துணை முதல்வரால் தமிழகம் முன்னேறப் போவதில்லை! எல்.முருகன் காட்டம்!

‘உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை’ என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னையில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்தில் ‘தூய்மையே சேவை’ என்ற பிரச்சார இயக்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர்…

அதிமுக மாஜிக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து!

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ராமச்சந்திரன், அவரது மகன், வங்கி அதிகாரி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக, 2014 – 19ம் ஆண்டில் பதவி வகித்தவர் கே.என்.ராமச்சந்திரன்; அ.தி.மு.க.,வைச் சேர்ந்த…

‘விஸ்வாச’ செந்தில் பாலாஜி! விட்டுக் கொடுக்காத ஸ்டாலின்! வியக்கும் சீனியர்கள்!

உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்த பிறகு வெளியே வந்த செந்தில் பாலாஜி மூன்றாவது தினமே மீண்டும் அமைச்சராக பதவியேற்பதுதான் எதிர்க்கட்சிகளைத் தாண்டி தி.மு.க.வின் சீனியர்களையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது…

நல்ல நேரத்தில் துணை முதல்வராகும் உதயநிதி..!

‘தமிழக அரசியல்’ வெப்சைட்டில் நாளை அமைச்சரவை மாற்றம் என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இரவில் கவர்னர் மாளிகையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான பத்திரிகை செய்தி வெளியானது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராகப் பதவியேற்க…

‘திருப்பதியின் புனிதத்தை குறைத்து விட்டார் நாயுடு!’ ஜெகன் குற்றச்சாட்டு!

திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானமே பொறுப்பு என்றும் அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்…

ஆதவ்வை இயக்குவது பாஜகவா? உடைந்த உண்மை பின்னணி?

‘‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு!’’ என்று அண்மையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இன்னும் தீனி போடும் விதமாக, விசிக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் பேசும் பொருளாக, திமுக…

நாளை அமைச்சரவை மாற்றம்! துணை முதல்வராகும் உதயநிதி!

கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்த்த அமைச்சரவை மாற்றம் நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது.…

காற்றில் பறந்த வாக்குறுதிகள்! மதுரையில் உண்ணாவிரதம்!

‘‘திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மதுரையில் அக்டோபர் 9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்’’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி…