உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்த பிறகு வெளியே வந்த செந்தில் பாலாஜி மூன்றாவது தினமே மீண்டும் அமைச்சராக பதவியேற்பதுதான் எதிர்க்கட்சிகளைத் தாண்டி தி.மு.க.வின் சீனியர்களையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் அவர் அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி இதனால் கொடுக்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் அமைச்சரவை மாற்றம் வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் சமீபகாலமாக கட்சி மூத்த நிர்வாகிகளிடம் சொல்லி வந்துள்ளார். அவரது ரிலீசுக்காகத்தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உயர்வும் தள்ளிப்போனது. செந்தில் பாலாஜி வரட்டும். அதற்கு ஏற்றபடி அமைச்சரவை மாற்றங்களை செய்யலாம் என்று தாமதம் செய்ததாக கூறப்பட்டது. செந்தில் பாலாஜி நம்பிக்கைக்குரிய நபர். அதனால் அவருக்கான வாய்ப்பை ஸ்டாலின் மறுக்க மாட்டார். அவர் வருகைக்காகவே ஸ்டாலின் காத்து இருக்கிறார் என முன்பு கூறப்பட்டதை நிஜமாக்கி காட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதற்கான காரணங்களைப் பார்ப்போம்….
கொங்கு மண்டலத்தில் திமுகவின் எழுச்சிக்கு செந்தில் பாலாஜி பெரிய காரணம். அங்கே மற்ற பல தலைவர்கள் இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி அளவிற்கு கைதேர்ந்தவர்கள், வியூக அமைப்பாளர்கள் இல்லை. கொங்கு மண்டலத்தில் மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி ஸ்டைல் பணிகள்.. அவர் தனது படைபலத்தை பயன்படுத்தும் விதம் திமுகவிற்கு ஒரு தேர்தல் மாடலாக மாறிவிட்டது.
செந்தில் பாலாஜி சிறப்பாக செயல்பட்டாலும்.. தலைமைக்கு தொடர்ந்து கட்டுப்பட்டு இருக்கிறார். எங்கேயும் லூஸ் டாக் இல்லை. பல வழக்குகள் இருந்தும்.. 15 மாதங்கள் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி டெல்லி பிரஷருக்கு இறங்கி வரவில்லை. பல மாநிலங்களில் முக்கிய தலைவர்கள் கட்சி மாறியது போல செந்தில் பாலாஜி மாறவில்லை.
செந்தில் பாலாஜி மனஸ்தாபங்களை மனதில் வைத்துக்கொள்ளாதவர்.. முக்கியமாக கூட்டணி கட்சிகளுக்காக சிறையில் இருந்தும் கூட தேர்தல் சமயத்தில் கொங்கு மண்டலத்தில் பணிகளை செய்தார். லோக்சபா தேர்தலிலும் கூட சிறையில் இருந்தபடியே அவர் செய்த பணிகள் ஸ்டாலினை இம்ப்ரஸ் செய்துள்ளது.
சிறையில் இருந்த போதெல்லாம்.. கடுமையான சூழலிலும் கூட செந்தில் பாலாஜி விசுவாசமாக இருந்தார். வெளியே வந்தும் தனது விசுவாசத்தை நேரடியாக கட்சிக்கு வெளிப்படுத்தினார். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜ முதன் முதலாக உதிர்த்த வார்த்தை ‘தமிழக முதல்வர் தளபதிக்கு நான் வாழ்நாள் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்’ என்றார். இதை டெல்லியிலிருந்து கவனிக்கத் தவறவில்லை மு.க.ஸ்டாலின்.
தவிர, செந்தில் பாலாஜியைப் பொறுத்தளவில் இருக்கும் கட்சிக்கு, தான் இருக்கும் வரை விஸ்வாசமாக இருக்கக்கூடியவர். அவரால் கட்சிக்கு பலம் கிடைக்குமே தவிர, அவரால் கட்சி பலவீனமடையாது.
இன்றைக்கு தி.மு.க.வில் இருக்கும் சீனியர்களே அறிவாலயம் மற்றும் செனடாப் சாலையில் நடக்கும் தகவல்களை தி.மு.க.விற்கு எதிராக வலைதளங்களில் பேசுபவர்களிடம் சொல்லிவிடுகிறார்கள். இந்த தகவல் மு.க.ஸ்டாலினுக்கு சென்றிருக்கிறது. அதாவது மிக முக்கிய மூத்த அமைச்சர்களே இந்த செயலில் இறங்குவதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கண்களை சிவக்க வைத்திருக்கிறது.
ஒட்டு மொத்த தி.மு.க. மீதான கோபத்தையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செந்தில் பாலாஜி என்ற ஒற்றை நபர் மீது காட்டியது. இதில் தி.மு.க.வில் உள்ள சீனியர்களே ஆனந்தம் அடைந்தார்கள். இதனையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசிக்கவில்லை.
மேலும், வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.விற்கு சவலாக அமையும். காரணம், மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை. செந்தில் பாலாஜி போன்று மிகவும் நம்பிக்கையான, தேர்தல் வியூகம் அறிந்தவர்கள் இருக்கவேண்டும் என முதல்வர் நம்பினார்.
தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் (இன்று பதவியேற்றும்) செந்தில் பாலாஜி விஸ்வாசமாக இருந்ததால்தான், முதல்வர் செந்தில் பாலாஜியை விட்டுக்கொடுக்கவில்லை. இப்போது புரிகிறதா காரணம்….
உண்மையும்… விஸ்வாசமும்… உழைப்பும்… இருந்தால் எங்கேயும் ஜெயிக்கலாம் என்பதுதான் செந்தில் பாலாஜியின் பாலிசி… அவருக்கு நாமும் வாழ்த்துவோம்..!