கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்த்த அமைச்சரவை மாற்றம் நாளை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘‘நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது.

உதயநிதிக்கு கூடுதலாக எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கப்படும்? இதற்கான துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்..? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன.

சீனியர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். ‘அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்’ என்று சொல்லிவிட்டார் உதயநிதி.

வாரிசு என்பதால் ஆணவத்தையோ, அதிகார மமதையையோ காட்டாமல் தன்னடக்கத்தோடு உழைத்தால் தமிழக மக்கள் ரசிக்கவே செய்வார்கள். அந்தத் தடத்திலேயே பயணிக்க விரும்பும் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.

ஆனாலும், முதல்வர் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை உதயநிதிக்கு கூடுதலாக தர இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நல்லதுறை. இதே தன்னடக்கத்தோடு, கூடுதல் உழைப்போது புதிய பதவியைத் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தவிர, உச்சநீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜியும் அமைச்சராக பதவியேற்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal