Month: June 2024

‘அடுத்த முறையும் நீங்கள்தான்!’ நிதிஷ் – நாயுடு உறுதி..!

“நான் எப்போதும் பிரதமர் மோடியுடன் இருப்பேன்” என்று ஐக்கிய ஜனத தள தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உறுதி அளித்து பாஜக கூட்டணி ஆட்சிக்கான புதிய நம்பிக்கையைப் பாய்ச்சியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நிதிஷ் குமார் கட்சி மாறியது ஐந்து…

நாளை எம்.பி.க்கள் கூட்டம்! ஜூன் 24ல் சட்டப்பேரவை கூட்டம்!

தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும்…

தமிழகத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்! பிரதமர் மோடி பெருமிதம்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்.டி.ஏ கூட்டணியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இதற்கான தீர்மானத்தை இன்று ஒருமனதாக நிறைவேற்றினார். என்.டி.ஏ கூட்டனியின் நாடாளுமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது.…

‘ஜெயலலிதா இல்லம்’ வரவேற்கிறது! சசிகலா திடீர் அழைப்பு!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்த நிலையில், ‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஒன்றிணைவோம் வாருங்களே’ என சசிகலா திடீர் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம்.…

எடப்பாடிக்கு எதிராக செயல்படுகிறாரா செல்லூர் ராஜூ..?

அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மா.செ.வுமான செல்லூர் ராஜு தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின் போது மக்களுடன் எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு மேற்கோளாக “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என்று பதிவிட்டிருந்தார்.…

‘இண்டியா’ கூட்டணி கூட்டம்! புறக்கணித்த மம்தா – தாக்கரே!

டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்கான வியூகத்தை முடிவு செய்ய இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ்…

ஜூன் 8ம் தேதி பிரதமராக பதவியேற்றும் நரேந்திர மோடி..!

பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி…

அதிமுக தொடர் தோல்வி! ஜெ. சமாதிக்கு செல்லும் கு.ப.கி.!

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்த சோகத்தில் இருந்து அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மீளாத நிலையில், ‘அணிகள் இணையவேண்டும்’ என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி…

மோடி தலைமையில் மீண்டும் நல்லாட்சி! ஜி.கே.வாசன் வாழ்த்து..!

அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 ஆவது முறை வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘‘நாட்டு மக்கள் பா.ஜ.க கூட்டணி மீதும், பிரதமர்…

மாநில கட்சி அங்கீகாரம் பெறும் விசிக – நா.த.க!

மக்களவை தேர்தலில் களம் கண்ட விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்கிறது. பொதுவாக ஒரு கட்சி, மாநில கட்சி அந்தஸ்து பெற வேண்டும் என்றால் பொதுத்தேர்தலில் மாநிலத்தில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 8%-க்கு மேல் பெற்றிருக்க…