Month: March 2024

விஜயபிரபாகரன் சின்ன பையன் ; அவர் நல்லா இருக்கனும்..! ராதிகா சரத்குமார்..!

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 25 நாட்களில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் பாஜகவில் கட்சியை இணைத்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் விருதுநகர்…

வயநாடு தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் யார்?

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ்,  பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.…

தந்திரமாக செயல்படும் பா.ஜ.க..! திருமாவளவன்!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘பாரதிய ஜனதா கட்சி மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் காலூன்றுவதற்காக அவர்கள் புதிய யுக்தியை கையாள்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறிய கட்சிகளிடம் சேர்ந்து கொண்டு ஊடுருவுகிறார்கள்.…

நாம் தமிழர் கட்சியில் இணைந்து வீரப்பனின் மகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டி..!

சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி 4 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் பாரதிய ஜனதாவில் அவருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இதனால்…

வாகன சோதனையில் டாக்டரிடம் ஆவணமின்றி கொண்டுவந்த பணம் பறிமுதல் !!

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தமிழக சுகாதாரத்துறைக்கு நிதியிழப்பு? பூந்தமல்லியில் நடப்பது என்ன?

தமிழக அரசு நிதிப்பற்றாக் குறையால் தள்ளாடி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையில் அரசின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்று வெளியாகியிருக்கும் தகவல்தான் வேதனையளிக்கிறது. தமிழக சுகாதாரத்துறையில் அப்படி என்ன நிதி முறைகேடாக நடக்கிறது என்கிறீர்களா? ஆம். நமது ‘தமிழக அரசியல்’ அலுவலகத்திற்கு…

விஜய பிரபாகர் Vs ராதிகா சரத்குமார்! விருதுநகர் விறுவிறு!

வரும் மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரை எதிர்த்து ராதிகா சரத்குமார் களமிறங்குகிறார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.…

2 ஜி வழக்கில் திடீர் திருப்பம்! டெல்லி ஐகோர்ட் அதிரடி!

2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. சிபிஐ மேல்முறையீட்டு மனு…

சொத்து குவிப்பு வழக்கு! இன்று மீண்டும் விசாணை!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தரப்பும் அமலாக்கத் துறை தரப்பும் ஆஜராகாத நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 2001- 2006ஆம் ஆண்டு அதிமுகவில் வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற…

ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே பாமக, பாஜக கூட்டணி..! ஓ.எஸ்.மணியன் விமர்சனம்..!

குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைந்துள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மறைமுகமாக சாடியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சி.வி.சண்முகம் 10 ஆண்டுகாலமாக…