தமிழக அரசு நிதிப்பற்றாக் குறையால் தள்ளாடி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையில் அரசின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்று வெளியாகியிருக்கும் தகவல்தான் வேதனையளிக்கிறது.

தமிழக சுகாதாரத்துறையில் அப்படி என்ன நிதி முறைகேடாக நடக்கிறது என்கிறீர்களா? ஆம். நமது ‘தமிழக அரசியல்’ அலுவலகத்திற்கு ஓர் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், ‘‘திருமதி டாக்டர் மாலதி துணை இயக்குனர் ரிட்டையர்டு அவர்கள் கடந்த 8 ஆண்டு காலமாக பொது சுகாதார நிலையத்தில் ( institute of bublic health poonamalli) ட்ரெயினிங் கன்சல்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார்.

65 வயதிற்கு மேல் அரசு பணி இல்லாத பட்சத்தில் இவர் மட்டும் எப்படி 68 வயதிற்கு மேல் இன்னமும் அரசு சம்பளம் (NHM) மாதம் 60 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு பணியில் இருந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது ட்ரெயினிங் கன்சல்டன்ட்டாக சென்னை பூந்தமல்லி பயிற்சி பள்ளியில் சுகாதார ஆய்வாளர் நிலை 1ல் பாடம் ஏதோ நடத்திக்கொண்டு இருக்கிறார்.

வேலை இல்லாத இன்றைய காலகட்டத்தில் அரசு பணியில் இருந்தவரே மறுபடியும் அரசு பணி சம்பளம் வாங்கி அரசு நிர்ணயிக்க பட்ட வயதுக்கு மேலும் 4 வருடமாக மாத சம்பளம் வாங்கி கொண்டு அரசு விதிகளுக்கு புறம்பாக அரசு விடுதியில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இவருக்கு எதன் அடிப்படையில் இன்னும் பணியில் வைத்து உள்ளீர்கள் என்பதனை தெளிவு படுத்த வேண்டும். அப்படி அவர் அரசு விதிகளுக்கு மாறாக பணி புரியும் பட்சத்தில் இதுவரை பணி புரிந்த மாத சம்பளம் அரசுக்கு இழப்பு என கருதி அதையும் ரெக்கவரி செய்து தக்க நடவடிக்கை எடுத்து உடனடி பணி நீக்கம் செய்ய கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பூந்தமல்லி பொதுசுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் பிரபாகரனிடம் பேசினோம். ‘‘சார் இது தொடர்பாக எங்களுக்கும் சமீபத்தில்தான் புகார்கள் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal