Month: January 2024

டிடிவி. தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொகுதி பொறுப்பாளர்கள், செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் சென்னை அசோக் நகர் 100 அடி சாலையில் உள்ள எம்.பி.கே. மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது. கட்சியின் பொது செயலாளர்…

தொகுதி பங்கீட்டில் சிக்கல்:கூடுதல் சீட் வேண்டும் – கம்யூனிஸ்டு கட்சி கே.பாலகிருஷ்ணன்!!

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூடுதல் சீட் கேட்க முடிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-…

ராமர் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அணுகினால் தேவையான வசதிகள் செய்து தரப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை திருவல்லிக்கேணியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு…

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு மிகவும் கூடியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நமது தமிழ்நாட்டின் முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும்…

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் தென்மேற்கு வங்கக்கடல்…

ஜனவரி 21ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு!

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. இளைஞரணி மாநாடு வருகிற ஜனவரி 21ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அந்த அணியை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில்,…

கொடநாடு வழக்கு..! பிப்ரவரி 9க்கு ஒத்தி வைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன்,…

கனிமொழிக்கு நடிகர் விஜய் வாழ்த்து! அதிரும் அரசியல் களம்!

தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு (தி.மு.க. & அ.தி.மு.க.) மாற்றாக ஒரு இயக்கத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கையில், சரியான சமயத்தில் களத்தில் இறங்கியிருக்கிறார் நடிகர் விஜய். சமீபகாலமாக நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக நலத்திட்டப் பணிகள் செய்து…

தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கம் தென்னரசுவின் வீடியோ…

கொடநாடு வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ…