சென்னை திருவல்லிக்கேணியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல வேண்டும் என பக்தர்கள் யாரும் இதுவரை இந்து அறநிலையத்துறையை அணுகவில்லை.

அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அறநிலையத்துறை தயாராக உள்ளது என்றார். இதனிடையே, கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டியதில் எந்த தவறும் இல்லை. தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழர்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் பெயர் சூட்டப்பட்டது சாலப் பொருத்தமானது என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal