சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொகுதி பொறுப்பாளர்கள், செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் சென்னை அசோக் நகர் 100 அடி சாலையில் உள்ள எம்.பி.கே. மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது. கட்சியின் பொது செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 3 மாவட்டங்களைச் சேர்ந்தநிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை துணை பொது செயலாளர் ஜி.செந்தமிழன், தென் சென்னை வடக்குமாவட்ட செயலாளர் கே. விதுபாலன், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ். வேதாசலம் (முன்னாள் எம்.எல்.ஏ), மற்றும் மாவட்ட செயலாளர்கள் செய்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal