இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூடுதல் சீட் கேட்க முடிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க எல்லோரும் ஒன்றுபட்டு பா.ஜனதாவை வீழ்த்துவோம்.

எல்லா கட்சிகளுக்கும் கூடுதல் சீட்டுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம். கண்டிப்பாக கூடுதல் தொகுதிகளை தி.மு.க. தலைமையிடம் கேட்போம். தேர்தலில் தி.மு.க. எந்த நிதியும் எங்களுக்கு தந்தது கிடையாது. நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க. வினரின் செலவுக்கு தேவைப்படும் நிதியை வாங்கி தி.மு.க.வினரிடமே கொடுத்து விட்டோம். இந்த முறையும் அப்படித்தான். அவர்களிடம் நிதி வாங்கி நாங்கள் தேர்தல் செலவுக்கு பயன்படுத்த மாட்டோம் என்றார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal