Month: July 2023

புறக்கணிக்கப்படும் சசிகலா; புதிய வியூகம் கைகொடுக்குமா?

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பால் தொடர்ந்து சசிகலா புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில்தான் புதிய வியூகம் ஒன்றை சசிகலா கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ‘மேலிட’ வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்று சேர்ப்பேன் என்று நம்பிக்கையுடன்…

பழனி மூலவர் சிலை! படம்பிடித்த கும்பல்! திடீர் எதிர்ப்பு!

பழனி முருகன் கோவிலில் மட்டுமே நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. கடந்த சில நாட்களாக மூலவர் சிலையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி…

செந்தில் பாலாஜி வழக்கு! நீதிபதிகள் ‘மாறுபட்ட’ தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதுதான், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார்…

மதிமுக மா.செ. நீக்கம்; அ.தி.மு.க.வில் ஐக்கியம்..?

ம.தி.மு.க.வின் முக்கியத் ‘தலை’ ஒருவர் சமீபத்தில்தான் வைகோ மீது அதிருப்தி தெரிவித்து கட்சியிலிருந்து விலகினார். இந்த நிலையில்தான் ம.தி.மு.க. மா.செ.வை வைகோ அதிரடியாக நீக்கியிருப்பது, ம.தி.மு.க.வில் புயலைக் கிளப்பியிருக்கிறது. மதிமுகவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக இருப்பவர் சீர்காழியை சேர்ந்த மார்க்கோனி. இவர்…

வீடு திரும்பிய முதல்வர்; சிகிச்சையின் முழு விபரம்!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.. இதைத்தவிர, அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார். அப்படித்தான்…

மனம் மாறிய எம்எல்ஏ! மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் திருப்பம்!

மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ. ஒருவர் மனம் மாறி மீண்டும் சரத்பவார் கட்சியில் இணைந்ததுதான் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அப்போது, கூவத்தூரில் இருந்த சசிகலா அணியை சேர்ந்த சிலர் ஓபிஎஸ் அணிக்கும், ஓபிஎஸ் அணியில்…

பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவும் ஒப்புதல்…

‘மாமன்னன்’ பார்த்து மகிழ்ந்த அமைச்சர்! கோபத்தில் மக்கள் – தியேட்டர் அதிபர்!

தூத்துக்குடியில் முதல்வரின் மகனும், அமைச்சருமான‌ உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் கட்சியினருடன் சென்று பார்த்தார். இந்த விவகாரம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி…

76 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன- ரிசர்வ் வங்கி தகவல்!

நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி அறிவித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய்…

‘மாமன்னன்’! உதயநிதிக்கு ‘குட்டு’ வைத்த பா.ரஞ்சித்?

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. வெளியான பின்னரும் விவாதங்கள் முடிந்தபாடில்லை, புதிய புதிய விவாதங்கள் படத்தை முன்வைத்தும், படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள், காட்சிகள் குறித்து…