தூத்துக்குடியில் முதல்வரின் மகனும், அமைச்சருமான‌ உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் கட்சியினருடன் சென்று பார்த்தார். இந்த விவகாரம்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ள‌து. இந்த படத்தை பார்க்க திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி நிர்வாகிகள் தொண்டர்களுடன் அமர்ந்து மாமன்னன் திரைப்படத்தை பார்த்தார்.மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஜீவன், அல்பட் உள்பட திமுகவைச் சேர்ந்த பலர் உடனிருந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.

அதே சமயம் தியேட்டர் உரிமையாளர் காவல்துறைக்கு புகார் அளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது பற்றி நாம் அங்குள்ள சிலரிடம் பேசினோம்.

‘‘சார், மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் எராளமாக இருக்கிறது. ஆனால், அமைச்சர் அந்த பிரச்னைகளை தீர்க்காமல், மூன்று மணி நேரம் படம் பார்த்திருப்பதுதான் தூத்துக்குடி மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு அமைச்சர் வந்து படம் பார்த்தார். அப்போது, அவருடன் ஏராளமானோர் டிக்கெட் எடுக்காமலயே ‘ஓசி’யில் பார்த்து விட்டுக் சென்றனர். அதன் பிறகு, இரவு காட்சிக்கு வந்த சில தி.மு.க. நிர்வாகிகள் டிக்கெட் வாங்காமலும், குடிபோதையில் ‘ஸ்நாக்ஸ்’ கேட்டு பிரச்னை செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டும், காவல் துறையினரையே அசிங்கமான வார்த்தைகளில் ‘நிதானமின்றி’ பேசியதாக கூறப்படுகிறது.

தவிர, தனது சகோதரரும், தூத்துக்குடி மேயருமான ஜெகன் பெரியசாமிக்கு சொந்தமாக தியேட்டர் இருந்தும், அந்த தியேட்டரில் அமைச்சர் படம் பார்ப்பதை தவிர்த்ததும், பல்வேறு வியூகங்களை கிளப்பியிருக்கிறது.

தி.மு.க.விலேயே சமூக நீதி முழுமையாக பின்பற்றப்படுகிறது. இது பற்றி இயக்குநர் பா.ரஞ்சித்தும் பேசியிருக்கிறார். இப்படி ஒரு சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை, தமிழக மக்கள் ரசிக்கவில்லை’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal