Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘மீண்டும் திமுகவுடன் கூட்டணி..!’ காங். தலைமைக்கு சுனில் அட்வைஸ்!

த.வெ.க.வை நம்பி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் இன்று ‘ந…தெருவில்’ நிற்கிறார்கள். ‘இடைத்தேர்தலும் நடக்கவில்லை… எம்.எல்.ஏ.வாகவும் செயல்பட முடியவில்லை…’ இதனால் விஜய் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த அதிருப்தியின் வெளிப்பாடுதான், ‘ராஜினாமாவை வாபஸ்’ பெற இசக்கி சுப்பையா…

பார்ட்டி ஃபண்ட்! கே.என்.நேருவுக்கு சொந்தமான 19 இடங்களில் திடீர் ரெய்டு!

பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், த.வெ.க.வுக்கு எதிராகவும், தி.மு.க.வுக்கு சாதகமாகவும் பல்வேறு விஷயங்களை சட்டமன்றத்தில் தனது கம்பீரமான குரலில் கே.என்.நேரு எடுத்துரைத்து வருகிறார். தவிர, வருகிற திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் அளிக்கிறேன் என்று சவால் விடுத்து…

அமைச்சர்கள் வாக்குறுதி ! தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், வாரவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்திவந்தனர். “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு அவகாசம் கொடுங்கள்,” என அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா,…

விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்! இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!

மத்திய அமைச்சரவையில் தற்போது பிரதமர் மோடி உள்ளிட்ட 69 பேர் இடம் பெற்றுள்ளனர். விதிமுறைகளின்படி 81 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். அந்த வகையில் 12 பேரை கூடுதலாக அமைச்சர்களாக நியமிக்க முடியும். கடந்த சில நாட்களாகவே மத்திய அமைச்சரவை…

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு! நீதிமன்றத்தில் நிதி அமைச்சர் ஆஜர்!

சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். தமிழக நிதி அமைச்சராகப் பதவி வகித்து வரும் மரிய வில்சன்,…

புதிய தலைமைச் செயலகம்! பரிசீலனையில் 4 இடங்கள்!

தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தமிழக அரசு 4 இடங்களை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், “புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக…

‘அரசியல் பேசவேண்டாம்’! தைலாபுரம் இல்லாத்தில் அறிவிப்பு பலகை!

‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 1980-ல் வன்னியர் சங்கம், 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்றுவித்தவர் மருத்துவர் ராமதாஸ். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் கிராமத்தில்…

‘நான் பேசும் போது ஓடிவிடக் கூடாது!’ உதயநிதியை சீண்டிய சி.எம்., விஜய்!

‘‘ எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிக்கிறேன். அப்போது யாரும் எந்திரிச்சு ஓடிவிடக் கூடாது என பிராமிஸ் செய்ய வேண்டும்’’ என முதல்வர் விஜய் சிரித்தபடியே சபாநாயகரிடம் சொல்லிவிட்டு அவையிலிருந்து சென்றுவிட்டார். தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று…

கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு! ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில், த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி…

லண்டன் செல்லும் விஜய்! மனைவி சங்கீதாவை சந்திப்பாரா?

லண்டன் செல்லும் விஜய் தனது மனைவி சங்கீதாவையும், மகளையும் சந்திப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற…