இந்தியாவில் எத்தனையோ பேர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், ஐஸ்வர்யா ராய் மட்டும்தான் இன்று வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிக்கு போது, அத்து மீறிய நடிகருக்கு அறை விட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஒரு பெண் சினிமாவில் நடிக்க வந்து விட்டாலே அவர்கள் எல்லாத்துக்கும் தயாராக தான் இருப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் சில ஹீரோக்கள் மனதில் இருக்கிறது. அப்படி சின்ன புத்தியுடன் இருக்கும் சில நடிகர்கள் பொது இடம் என்று கூட பார்க்காமல் அது மீறிய கதைகளும் இருக்கிறது. அப்படித்தான் சாக்லேட் பாய் இமேஜ் உடன் வலம் வந்த ஹீரோ சக ஹீரோயினிடம் தன் வேலையை காட்டி அவமானப்பட்டு போயிருக்கிறார்.

அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்த அப்பாஸ் தான். இவர் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து ‘கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்’ என்ற படத்தில் நடித்திருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த சமயத்தில் கூட இவருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா என்று பலரும் வெளிப்படையாகவே பேசினார்கள்.

இதனால் கொஞ்சம் கர்வத்துடன் இருந்த அப்பாஸ் தன்னுடைய ரேஞ்சுக்கு உலக அழகியுடன் நடிக்கிறோமே என்ற கெத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார். அந்த மமதையில் அவர் ஐஸ்வர்யா ராயிரம் கொஞ்சம் அல்ல நிறையவே அசடு வழிந்து இருக்கிறார். அது மட்டும் இன்றி ஒரு பாடல் காட்சியின் போது அவரிடம் எக்குத்தப்பாக அத்துமீறி இருக்கிறார்.

அதாவது கண்ட இடத்தில் உரசுவது, தெரியாமல் கைப்படுவது போல் தொடுவது என தன் வேலையை காட்டி இருக்கிறார். அவருடைய இந்த எண்ணம் புரிந்தும் ஐஸ்வர்யா ராய் சற்று பொறுமையாகவே இருந்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பொறுமை பறக்கும் அளவுக்கு அப்பாஸ் நடந்து கொண்டாராம்.

இதனால் கடுப்பான உலக அழகி அனைவரின் முன்னிலையிலும் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து கோபமாக கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொண்டாராம். இந்த எதிர்பாராத தாக்குதலால் அவமானப்பட்டு கூனி குறுகிப் போய் இருக்கிறார் அப்பாஸ்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் என்ன நடந்தது என்று விசாரித்து உண்மைகளை தெரிந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு அப்பாஸை, ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்கவும் சொல்லி இருக்கிறார். இப்படி ஒரு ரணகள சம்பவத்திற்கு பிறகு தான் அந்த படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இவ்வாறு தன்னிடம் வாலாட்டிய நடிகரை ஐஸ்வர்யா ராய் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருப்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal