சமீபத்தில்தான் நகைகளைக் காணவில்லை என ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, நகைகளை திருடிய வேலைக்காரப் பெண் பகீர் தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தினார். இந்தநிலையில்தான், இரண்டாவது மகள் சௌந்தர்யா கார் சாவி காணவில்லை என புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் கதாநாயகனாக இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும், கோடிக்கணக்கான வசூலையும் தன் கைவசம் வைத்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். ரஜினிக்காக உயிரை விடும் அளவுக்கு கூட இன்றுவரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எப்போதுமே ஒரு ஹீரோவை தங்களுக்கு பிடிக்கும் என்றால் அந்த ஹீரோவை மட்டுமல்லாமல், அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்களை கூட தலையில் வைத்து கொண்டாடுவார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். ஆனால் தமிழ்நாட்டிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ரஜினிகாந்துக்கு மட்டும் இந்த விதி தலைகீழானது. சூப்பர் ஸ்டாரை பிடித்த அளவிற்கு ரசிகர்கள் அவருடைய மனைவியோ அல்லது அவருடைய மகள்களையோ கொண்டாடுவதில்லை.

மற்ற பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் நுழையும் பொழுது அவர்களுடைய ரசிகர்கள் எப்படியாவது அந்த வாரிசை வளர்த்து விட வேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் ரஜினியின் மகள்கள் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ரஜினி ரசிகர்களிடமிருந்து அவர்களுக்கு எந்த ஒரு வரவேற்பும், பாராட்டும் கிடைத்ததே இல்லை. இயக்குனர்களாக இருக்கும் ரஜினியின் இரு மகள்களின் படங்களுக்கு கூட அவருடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பது இல்லை.

உண்மையை சொல்லப்போனால் ரஜினியின் பெயரை கெடுப்பது அவருடைய குடும்பம் தான் என்ற ஆதங்கம் அவருடைய ரசிகர்களுக்கு பல ஆண்டுகளாக இருக்கிறது. இதற்கு ரஜினியின் குடும்பத்தார் தான் மிக முக்கிய காரணம். அவருடைய மகள்கள் இருவரும் தங்களது இஷ்டத்திற்கு முடிவுகளை எடுத்துக் கொண்டு ரஜினியை கஷ்டப்படுத்துவதாக அவருடைய ரசிகர்களுக்கு கோபம் இருக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை மணந்தது, சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய முன்னாள் கணவர் அஸ்வினை விவாகரத்து செய்தது, அதன் பின்னர் அவருடைய இரண்டாவது திருமணம், சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- தனுஷ் தம்பதி இருவரும் திருமண உறவை முறித்தது என அத்தனையும் ரஜினிகாந்த்துக்கு கவலை உண்டாக்குவதையும், அவர் மரியாதையை கெடுப்பதையும் அவருடைய ரசிகர்கள் விரும்பவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் வீட்டின் நகைகள் திருட்டு போய்விட்டதாக சொல்லி புகார் கொடுத்து அது மிகப் பெரிய பிரச்சனை ஆனது. அதன் பின்னர் சமீபத்தில் வெளியான லால் சலாம் போஸ்டரில் ரஜினிகாந்தின் லுக் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இந்த போஸ்டர் பிரச்சனை முடிவதற்குள்ளேயே ரஜினியின் இரண்டாவது மகள் தன்னுடைய காரின் மற்றொரு சாவியை காணவில்லை என்று புகார் கொடுத்து இருப்பது ரஜினிக்கு மேலும் மேலும் அவருடைய மகள்கள் பிரச்சனையை கொடுப்பதாக அவருடைய ரசிகர்கள் நினைக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal