நடிகை பிந்து மாதவி திரிஷாவின் முன்னாள் காதலருடன் டேட்டிங் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. கண்ணழகி நடிகையான பிந்துமாதவி தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகை பிந்து மாதவி யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் கைவசம் வைத்து இருக்கிறார்.விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தில் கவர்ச்சியை காட்டி, ரசிகர்களின் இதயத்தை வளைத்துப்போட்ட நடிகை பிந்து மாதவி. சில்க் ஸ்மிதா போல வசீகரமான கண்ணழகை கொண்டவர். தேசிங்கு ராஜா படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்ட பிந்து மாதவி, தேசிங்கு ராஜா படத்தில் அழகு பதுமையாக வலம் வந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், தமிழுக்கு ஒன்றை அழுத்தவும், சவாலே சமாளி, ஜாக்சன் துரை, பக்கா, பசங்க, கழுகு 2 திரைப்படத்தில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் பிஸியாக நடித்த வந்த பிந்து மாதவிக்கு படவாய்ப்பு குறைந்ததை அடுத்து, கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த பிந்து நான்காவது இடத்தை பிடித்தார். இதையடுத்து, நாகார்ஜூன் தொகுத்து வழங்கி தெலுங்கு பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்நிலையில், நடிகை பிந்து மாதவி, வருண் மணியனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து பிந்து மாதவியிடம், வருண் மணியனை டேட்டிங் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிந்து, வருண் மணியனுடன் டேட்டிங் செய்தது உண்மைதான் என்றும் த்ரிஷாவை விட்டு அவர் பிரிந்த பிறகு தான் நான் டேட்டிங் செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினான திரிஷாவுக்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமண தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் முன்னரே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal