தற்போது திரிஷாவை குந்தவையாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர். இவர் அறிமுகமான மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக எப்படி இருந்தாரோ அதேபோன்று இப்போது வரை தன்னுடைய அழகு மங்காமல் 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷாவின் ஒட்டுமொத்த சொத்து விவரம் எவ்வளவு என்பது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனென்றால் திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்காக மட்டும் ரூபாய் 3 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.
அதே போல் விஜய்யுடன் ஜோடியாக லியோ படத்தில் நடிக்க ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். அதுமட்டுமல்ல மாதம் 70 லட்சம், ஆண்டிற்கு 10 கோடி வரை திரிஷாவிற்கு விளம்பரங்களின் வாயிலாக கிடைக்கிறது. மேலும் சென்னையில் திரிஷாவிற்கு மட்டும் ரூபாய் 7 கோடி மதிப்புள்ள சொந்த வீடும், ஹைதராபாத்தில் ஒரு சொகுசு பங்களாவும் உள்ளது.
அதுமட்டுமல்ல திரிஷா பல முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் மூலமும் சம்பாதித்து வருகிறார். இவரிடம் ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 70 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் உள்ளது. ஆக மொத்தம் திரிஷாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 85 கோடி.
திருமணமானால் கூட தன்னுடைய கேரியருக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று நடிப்பின் மீது முழு கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் திரிஷா, 40 வயதில் இவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்திருப்பது பிரபலங்களை மட்டுமல்ல ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்துகிறது. இதை அறிந்த தளபதி ரசிகர்களும் லியோ ஜோடினா சும்மாவா! என்று கெத்து காட்டுகின்றனர்.
மேலும் 14 வருடங்களுக்குப் பிறகு லியோ படத்தின் மூலம் விஜய்யும் திரிஷாவும் ஜோடி சேர்ந்திருப்பதால் இந்த எவர்கிரீன் ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆகையால் இந்த படம் வரும் ஆயுத பூஜை அன்று ரிலீஸ் ஆகுவதால் அன்று திரையரங்கை ரணகளம் செய்ய இப்போதிலிருந்து திரிஷா மற்றும் தளபதி ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கின்றனர்.