‘அந்தரங்க’ வாழ்க்கை வாழ்வதில் அப்பாவையே மிஞ்சிவிட்டார் ஸ்ருதிஹாசன் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்!
1980களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது அவர் தமிழை விட தெலுங்கில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் காதலனுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் ஸ்ருதியிடம் திருமணம் செய்து கொள்வீர்களா என்ற கேள்வி எழுப்பிய போது, அப்பாவையே மிஞ்சிய அளவுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். தற்போது ஸ்ருதி, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பார்ட்னரை நினைத்து அவரே பலமுறை பெருமைப்பட்டுக் கொண்டாராம்.
ஏனென்றால் நடிகையாக இருந்தாலும் அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி சோசியல் மீடியாவில் வெளிப்படையாக போட்டு உடைத்து விடுவார். அதையெல்லாம் பொருட்படுத்தாதவர்களை மட்டுமே தன்னுடைய பார்ட்னராகவும் வைத்துக் கொள்வார். அதுமட்டுமல்ல திருமணம் என்பது ஒரு கட்டமைப்பு தான். அதற்கென்று ஒரு மதிப்பு மரியாதை இருக்கிறது. நிச்சயம் அதற்கு புரிதல் அவசியம்.
தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஸ்ருதி-க்கு அவருடைய பார்ட்னர் உடன் திருமணம் நடந்தாலும் ஓகே, இல்லை என்றாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர். இவர் சமூக வலைதளங்களில் தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அசால்டாக பதிவிடுபவர். இதைப் பற்றிய பல கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக மீடியாவிலும் பதில் சொல்லி வருகிறார்.
இதே போன்று தான் அவருடைய அப்பாவும் முதலில் திருமணம் செய்து கொண்டு இரண்டு மகள்கள் இருக்கும்போது திருமணம் செட் ஆகவில்லை என விவாகரத்து பெற்றுவிட்டார். அதன் பிறகு தன்னுடன் இணைந்து நடித்த நடிகை கௌதமியுடன் நீண்ட நாட்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். அதன் பிறகு அவருடனும் செட் ஆகாமல் பிரிந்து விட்டார்.
இதே போன்ற மனநிலை தான் இப்போது கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிறது. அவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பாட்னரை கண்டிப்பாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ வேண்டிய அவசியம் இல்லை என வெளிப்படையாக கூறி வருகிறார்.