சென்னை மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில், பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர். தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.

கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று தெரிவித்து இருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal