நடிகை நயன்தாராவுக்கு, இயக்குநர் அட்லீ போட்டி திடீர் கண்டிஷன் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகிறது.

இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் அட்லீக்கு மட்டுமின்றி நயன்தாராவுக்கும் பாலிவுட்டில் முதல் படம். இவர்கள் இருவரின் அறிமுக படமே பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் படத்தில் கிடைத்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு போன்ற பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்போது நயன்தாராவுக்கு அட்லீ போட்ட கண்டிஷனால் விழி பிதுங்கி நிற்கிறாராம். அதாவது சமீபகாலமாக நயன்தாரா தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போடவில்லை.

ஆகையால் பாலிவுட்டில் ஷாருக்கான் வாய்ப்பு கிடைத்தவுடன் மீண்டும் தனது மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி ஆரம்பத்தில் அட்லீயிடம் ஜவான் படத்தில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என நயன்தாரா கண்டிஷன் போட்டுள்ளார். அட்லீயும் அது போன்ற காட்சிகள் படத்தில் இல்லை என்று கூறியுள்ளார்.

இப்போது ஜவான் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. இந்த நேரத்தில் ஷாருக்கான் மற்றும் அட்லீ யோசித்து படத்தில் கவர்ச்சியான காட்சிகள் வைக்கலாம் என்ற முடிவெடுத்துள்ளனர். சமீபகாலமாக பாலிவுட்டில் பெரிய நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வந்தது.

அந்த சமயத்தில் ஷாருக்கானின் பதான் படம் தான் மிகப்பெரிய ஹிட் கொடுத்து பாலிவுட்டை தூக்கி நிறுத்தியது. மேலும் அந்த படத்தில் தீபிகா படுகோன் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி நடனம் ஆடியிருந்தார். இது அப்போது சர்ச்சையை உண்டாக்கினாலும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்திருந்தது.

ஆகையால் ஜவான் படத்திலும் கவர்ச்சி காட்ட வேண்டும் என நயன்தாராவுக்கு கிடக்குபுடி போட்டுள்ளனர். ஆனால் நயன்தாரா ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டி நடித்தாலும் இப்போது அதுபோன்று நடிப்பதில்லை. மேலும் படத்தின் வெற்றிக்கு கவர்ச்சி முக்கியம் என்பதால் அப்படி நடிக்க நயன்தாரா சம்மதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal