நெல்லை பாளையங்கோட்டையில் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்களை தடுப்பது பற்றிய சைபர் கருத்தரங்கு நடைபெற்றது.

தமிழ்நாடு காவல் துறை தலைமை கூடுதல் இயக்குனர் சைபர் கிரைம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின் படி பாளையங்கோட்டை செல்வி மஹாலில் சைபர் குற்றங்களை குறைப்பது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் இ.கா.ப அவர்கள், சிறப்பு விருந்தினர் நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் திரு.சரவணகுமார் அவர்கள், தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கணினி ஹேக்கிங் பற்றிய விழிப்புணர்வு, சைபர் குற்றங்களை தடுப்பது பற்றியும் வங்கி மேலாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கணினி சார் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் நெல்லை மாநகர மற்றும் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் உதவி ஆய்வாளர், தொழில் நுட்ப பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal