நயன்தாராவின் காதல் கணவரை தனது படத்திலிருந்து நடிகர் அஜித் எப்போது கழற்றி விட்டாரோ அப்போதிலிருந்தே அடிமேல் அடி விழ ஆரம்பித்துவிட்டது.

தமிழ் திரையுலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தற்போது கோலிவுட் திரை உலகை தாண்டி, பாலிவுட் திரையுலகிலும் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அந்த வகையில் ஹிந்தியில் சமீபத்தில் வெளியாகி, ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை நிகழ்த்திய ‘பதான்’ படத்தின் ஹீரோவும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரமாக மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு… தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் சென்னை திரும்ப விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டது.

இதையடுத்து நயன்தாரா சமீபத்தில் கதையின் நாயகியாக நடித்த 0 2, கனெக்ட், போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது. சில படங்களில் நடிக்க கமிட்டான நிலையில், ஒரு சில காரணங்களால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால், தயாரிப்பாளரிடம் அட்வான்சாக பெற்ற பணத்தையும் நயன்தாரா திருப்பிக் கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நயன்தாரா தன்னுனடய அடுத்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஹீரோ மற்றும் இயக்குனருடன் இணைந்துள்ளார். நடிகை அமலா பாலை வைத்து ‘ஆடை’ படத்தை இயக்கிய ரத்தக்குமார் இயக்கத்தில், நயன்தாரா நடிக்க உள்ளதாகவும்… இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘லியோ’ படத்தில் டயலாக் ரைட்டராக இருந்து வரும் ரத்னகுமார், அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், நயன்தாரா – ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகளில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.

அதே போல் ராகவா லாரன்ஸ் தற்போது ‘ஜிகிர்தண்டா 2’ மற்றும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் பிஸியாகி உள்ளார். இதுவரை கோலிவுட்டில் விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற டாப் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வந்த நயன்தாரா, தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டதோடு, தொடர்ந்து இளம் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க உள்ளது யாரும் எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா எடுக்கும் முடிவுகளை அவரது ரசிகர்களாலேயே நம்ப முடியவில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal