நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் பாலிவுட் நடிகைகளுடன் நடித்து வந்த நடிகர் அஜித் துணிவு படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் உடன் நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக அஜித்துக்கு ஜோடியாக போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கிய (நயன்தாராவின் கணவர்) விக்னேஷ் சிவன் அடுத்ததாக நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளார். துணிவு படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அஜித் நடிக்கப் போகும் ஏகே 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. சபரி மலைக்கு சென்ற போது கூட அஜித் படம் குறித்த கேள்விகள் தான் விக்னேஷ் சிவனிடம் எழுப்பப்பட்டது. ஆனால், சாமி சரணம் என சொல்லி விட்டு அப்டேட் கொடுக்காமல் எஸ்கேப் ஆகி விட்டார்.

தளபதி 67 படத்தில் இணைந்துள்ள நடிகை த்ரிஷா ஏகே 62 படத்திலும் அஜித்துடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் த்ரிஷா நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராய் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன.

ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பெயரும் அடிபட்டு வந்த நிலையில், அவர்கள் இருவரும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை அஜித் படத்தில் நடிக்காத நிலையில், இந்த படத்தின் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார் என்கின்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள அஜித்தின் ஏகே 62 படத்தில் தமிழ்நாட்டு நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்கவும் பேச்சுக்கள் அடிபட்டு வருவதாக தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்தால் சூப்பராத்தான் இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal