நிலவுரிமைப் போராளியான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (வயது 97) தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் “மனிதம்” விருதை பெறுகிறார்.
இந்த விருது மறைந்த தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் 77 வது பிறந்தநாளான நவம்பர் 20 ஆம் தேதி ஞாயிறு அன்று திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட உள்ளது ! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர் தோழர் M. ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், தேசிய குழு உறுப்பினர்கள் தோழர் வெங்கடேஷ், Rtd PHF Dr V.ஜெயன், ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வில், மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மற்றும் திரு K.சிவக்குமார் ( நிர்வாக அறங்காவலர்,காந்திகிராமம் அறக்கட்டளை ),டாக்டர் G. பங்கஜம் (செயலாளர், காந்திகிராமம் அறக்கட்டளை ), டாக்டர் VPR. சிவக்குமார் ( பதிவாளர், காந்திகிராம் பல்கலைக்கழகம் ), ஆகியோர் இணைந்து “மனிதம்” விருதை வழங்க உள்ளனர்!
சிறப்பு அழைப்பாளர்களாக, இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தோழர் எம்.கே.சிவாஜி லிங்கம், தமிழர் தேசிய முன்னணி, பொதுச் செயலாளர் தோழர் ஆவல். கணேசன், சமூக செயற்பாட்டளர் தோழர் அருள் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் !
மேலும் சங்கத்தின் நிர்வாகிகள், மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன், புதுச்சேரி மாநில யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா, மாநில நிர்வாக குழு உறுப்பினர், தோழர் S.P.ராமநாதன், மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் ஆர்.கண்ணன், தேசிய குழு உறுப்பினர் தோழர் அ.எழில் ஆசிர்வாதம், மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை வெற்றி பெற செய்ய உள்ளன் ! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் ” மனிதம் ” விருதை பெற உள்ள அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் !
காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் அம்மா அவர்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 11 ஆம் தேதி சந்தித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.