1997 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'லவ் டுடே'. விஜய்-சுவலட்சுமி நடிப்பில் ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மு. பாலசேகரன் இயக்கி பெரும் வெற்றி பெற்ற படம் இது.
 இப்போது அந்த டைட்டிலில் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள
'லவ் டுடே' படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்பொது உள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இப்படம் ஒரு செல் போனால் காதலுக்கு வரும் சிக்கல்களை கதையாக நகர்த்தி உள்ளார். பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சிறு சிறு பிரச்சைனைகளை விறுவிறுப்பாக எடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
 
படத்தின் ஆரம்பத்தில் விஜய், ஆர்.பி. சவுத்ரி, சூப்பர் குட் ஃபிலிம்ஸ்..-க்கெல்லாம் நன்றி கார்டு போடும் பிரதீப், அந்த மெகா ஹிட் படத்தின் இயக்குனர் பாலசேகரனை கண்டுக் கொள்ளவில்லை. ' டைரக்டர் பாலசேகரனுக்கு நன்றி 'என்ற ஒரு வார்த்தை போடத் தவறிவிட்டார். அந்தப் படத்தை இன்று வரை ரசிக்கும் பலருக்கும் இது ஒரு குறையாக உள்ளது பிரதீப் மீது..!
 
ஆனால் இவ்விரண்டு படத்திற்கும் படம் பேரை தவிர்த்து வேரேதும் ஒற்றுமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By Porkodi