மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த நாயகி திரிஷா, சமீபத்தில் வெளிநாட்டுக்கும் சுற்றுலா போயிருந்தார். அங்கிருந்து வந்ததும் திடீரென தவறி விழுந்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட த்ரிஷா, சுற்றுலா பாதியில் முடிந்தது என குறிப்பிட்டார்.

இதனால் பேண்டேஜ் எல்லாம் போட்டுஅவதிப்பட்டு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் பிரைவேட் பார்ட்டியில் கலந்துகொள்வாரா மாட்டாரா என்கிற கேள்வியும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் வலியையும் பொருட்படுத்தாமல் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட திரிஷா, அங்கு தன்னுடன் படத்தில் பணியாற்றியவர்களுடன் ஜாலியாக நடனமாடி மகிழ்ந்துள்ளார்.
  மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பாராட்டுக்களை பெற்ற திரிஷாவுக்கு தற்போது கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.
 
அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவும் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
 

By Porkodi