நடிகர் விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ வெளியாகவுள்ளது.

அண்மையில் இப்படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் குரலில் வெளியான இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் இரண்டாவது பாடல் ஜூன் மாதம் வெளியாகும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு  X தளம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.  ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஏற்கனவே ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், மேலும் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திருப்பாச்சி’. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த யுகேந்திரன், 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்  ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் மூலம் விஜய்யுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal