லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூதாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இந்த ட்ரைலரை கோயம்பேட்டில் உள்ள ராகினி திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதனால் ராகினி திரையரங்கை சூழ்ந்த விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். மேலும், திரையரங்கினுள் குவிந்த ரசிகர்கள் ட்ரைலரை உற்சாக கண்டு ரசித்தனர். அப்போது, அங்கிருந்த சேர்களை கடுமையாக சேதப்படுத்தி உள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal