சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கடந்த 20-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கியசாமி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி விசாரணை நடத்தி எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 294, 295ஏ, 505/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கியசாமி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி விசாரணை நடத்தி எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 294, 295ஏ, 505/2 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

பொதுக்கூட்டங்களில் அவமரியாதையாக பேசுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மத கலவரத்தை உருவாக்கும் வகையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal