முதல்வரை சந்தித்து கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முடிவடைந்த நிலையிலும் இன்னும் தேர்தல் கட்டுப்பாடுகள் உள்ளது. இதன் காரணமாக புதிய திட்டங்களை அறிவிக்கவோ செயல்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது. இந்தநிலையில், தனது குடும்பத்தோடு கொடக்கானலுக்கு முதலமைச்சர் ஓய்வெடுக்க சென்றுள்ளார். முன்னதாக தமிழக பாஜக ஓ பி சி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி என்பவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை மதுரை விமான நிலையத்தில் சந்திக்க முற்பட்டார்.

அப்போது அவர் கையில் கஞ்சா பொட்டலமும் இருந்துள்ளது. இதனையடுத்து பாஜக நிர்வாகியை அதிரடியாக சுற்றி விளைத்த போலீசார் தங்கள் வாகனத்தை ஏற்றி அழைத்து சென்றனர் அப்போது சங்கரபாண்டியிடம் கையில் இருந்த கடிதத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள் மாணவர்கள் ஏழை கூலி தொழிலாளர்கள் சிறுவர்கள் முதல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.

இதனால் தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் குற்ற செயல் அதிகரித்து வருகிறது இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்கள் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal