கோலிவுட்டிலும் சரி, ஹாலிவுட்டிலும் சரி நடிகர் நடிகையர்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காத நடிகை அமலா பால் ஓபனாக பீர் அடித்து போதையில் அடித்த கூத்துதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மலையாள நடிகையான அமலா பால், தமிழ் திரையுலகில் முதன்முதலில் நடித்த திரைப்படம் சிந்து சமவெளி. அப்படம் அவருக்கு பெரியளவில் வெற்றியை தேடி தராவிட்டாலும், அடுத்ததாக அவர் ஹீரோயினாக நடித்த மைனா திரைப்படம் அமலா பாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்திற்காக அவருக்கு விருதுகளும் கிடைத்தன.

இதையடுத்து விஜய், சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாப்புலர் ஆன அமலாபால், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்து பிரிந்தது.

ஏ.எல்.விஜய்யை பிரிந்த பின்னர் சினிமாவில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கிய அமலாபால், ஆடை என்கிற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அவரின் துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அப்படத்திற்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குறையத் தொடங்கின.

தமிழில் பட வாய்ப்பு குறைந்தாலும், பிற மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கிய அமலா பால், தெலுங்கில் பிட்ட காதலு, மலையாளத்தில் கிறிஸ்டோபர், இந்தியில் போலா போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் இவர் கைவசம் மூன்று திரைப்படங்கள் உள்ளன. அதில் ஒன்று பிருத்விராஜின் ஆடுஜீவிதம். இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

ஓய்வு நாட்களில் சுற்றுலா செல்ல விரும்பும் அமலா பால், தற்போது கோவாவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்குள்ள கடற்கரை ஒன்றின் ஓரத்தில் அமைந்துள்ள ஓப்பன் பாரின் ஜாலியாக காற்று வாங்கியபடி ஒரு பீரை வாங்கி வைத்து குடித்தபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஓப்பனா சரக்கு அடிக்குறாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal