தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான ‘சொல்லிவிடவா’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்போது அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்தியை நடிகர் செந்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செந்தில், உமாபதி, நடிகர் அர்ஜுன் மகளை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறினார்.
நடிகர் உமாபதி 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான. பின்னர், ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். உமாபதி 2021-ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.