நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். இதையடுத்து ஜேசன் சஞ்சய் விரைவில் படம் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

அதாவது, சஞ்சய் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தில் விஜயசேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் கசிகிறது?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal