தமிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘ராதே ஷியாம்’ தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி தோல்வி கண்டது. தொடர்ந்து சிரஞ்சீவியுடன் நடித்த ‘ஆச்சார்யா’ படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் சரிவை சந்தித்து வருவதால் அவரை முன்னணி கதாநாயகர்கள் ஓரம் கட்டுகிறார்கள் என்றும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றை அவரது குடும்பத்தினர் காப்பாற்றியதாகவும் மும்பையை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனால் கடுப்பான பூஜா ஹெக்டே இணையத்தில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதாக அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal