தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா நடித்த ‘ஊ சொல்றியா’ பாடல் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்த ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையாங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து சமந்தா தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர், வேலூர் பொற்கோவில், ஈஷா யோகா மையம், பண்ணாரி அம்மன் கோவில் என்று தமிழ்நாட்டில் சுற்றினார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் இடங்களிலிருந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஷாட் ஹேரில் நியூ லுக்கில் மாறியுள்ள சமந்தாவை பார்த்த ரசிகர்கள் அவர் அழகின் ஓவியமாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal