நடிகர் கமல்ஹாசன், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து கமல், நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இதில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் கமல்ஹாசனின் “கேஎச்233” படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படம் முழுக்க முழுக்க சமூக அக்கறைக் கொண்ட அரசியல் படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான வீடியோவில் “Rise to Rule” என்று குறிப்பிட்டுள்ளதாக கண்டிப்பாக இது அரசியல் படமாகவே இருக்கும் என்று பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal