வெப் தொடரில் ஆபாச காட்சியில் நடித்து அதிர்ச்சி கொடுத்த நடிகை தமன்னா, அதற்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் போனதால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என அடுத்தடுத்து 2 வெப் தொடர்களில் நடித்தார் தமன்னா. இந்த இரண்டு வெப் தொடர்களும் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.

இதற்கு காரணம் இந்த இரண்டு வெப் தொடர்களிலுமே நடிகை தமன்னா ஆபாசமான படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தது தான். இதுவரை எந்த நடிகருடனுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் என்கிற பாலிசி உடன் இருந்து வந்த தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடருக்காக அதையெல்லாம் தகர்த்தெறிந்து, தன்னுடைய காதலன் விஜய் வர்மாவுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமின்றி ஜீ கர்தா என்கிற வெப் தொடரில் மேலாடையின்றி நிர்வாணமாகவே படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார் தமன்னா. அவரின் இந்த ஓவர்டோஸ் கவர்ச்சி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது திரையுலகினருக்கே சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இப்படி உச்சக்கட்ட கவர்ச்சி வேடங்களில் நடிக்க நடிகை தமன்னா வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வெப் தொடர்களில் நடிக்க அவர் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வழக்கமாக ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கும் தமன்னா, கவர்ச்சி தூக்கலாக நடிக்க ரூ.2 கோடி வாங்கி நடித்துள்ளார். நடிகை தமன்னா அடுத்ததாக தமிழில் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் காவாலா என்கிற பாடலில் நடிகை தமன்னா ஐட்டம் டான்ஸும் ஆடியுள்ளார். அப்பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அது யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது. ஆபாச காட்சியில் தமன்னா நடிக்க ஒத்துக்கொண்டதும், தயாரிப்பாளர் அள்ளிக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal