ரெஜினா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சுனைனா திடீரென மேடையில் கண்ணீர் விட்டு அழுததை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தனர்.

மலையாள இயக்குனர் டொமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ரெஜினா. இதில் நடிகை சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சதீஷ் நாயர் தான் இப்படத்தை தயாரித்தும் உள்ளார். ரெஜினா திரைப்படம் வருகிற ஜூன் 23-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கேரளாவில் நடைபெற்ற ரெஜினா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுனைனா, திடீரென மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். அதில் அவர் பேசியதாவது : “இந்த வாய்ப்பை தந்த இயக்குனர் டொமின் சில்வாவுக்கும், தயாரிப்பாலர் சதீஷுக்கு மிக்க நன்றி. சில்லுக்கருப்பட்டி படம் பார்த்து தான் இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததாக டொமின் சொல்லி உள்ளார். இப்போது இங்கு காட்டப்பட்ட வீடியோவில், நான் சினிமாவுக்கு வரும் முன் என்னுடைய இளம் வயது புகைப்படங்கள் இருந்தது. அப்போதெல்லாம் சினிமா என்பது எனக்கு கனவு போல இருந்தது. அது தற்போது நிஜமாகி உள்ளதை பார்க்கும் போது நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் எனக்கூறி எமோஷனல் ஆன சுனைனா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து அவரை படக்குழுவினர் ஆறுதல் படுத்தினர்.

பின்னர் தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்தும், எனது பேமிலியில் இருந்தும் எனக்கு நிறைய ஆதரவு கிடைத்துள்ளது. அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ரெஜினா திரைப்படம் எனது கெரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக பார்க்கிறேன். 2018-ல் ஒரு காலகட்டத்தில் நான் அடுத்து என்ன பண்ண வேண்டும் என பலரும் எனக்கு ஆலோசனை கூற ஆரம்பித்ததால் நான் மிகவும் சோர்வடைந்துபோனேன்.

நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே செய்ய ஆசைப்பட்டேன். எனக்கு உண்மையாக இருப்பது போன்று தோன்றும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தேன். அடுத்தடுத்து சில்லுக்கருப்பட்டி, தெலுங்கில் ராஜராஜ சோரா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட அப்டங்களை தேர்வு செய்து நடித்தேன். ரெஜினாவும் அப்படி ஒரு படமாக இருக்கும். ரெஜினா என்கிற ஒரு சாதாண குடும்பப் பெண் வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்கள் தான் இப்படத்தின் கதை. படம் பார்க்கும் போது ரெஜினாவின் உலகத்திற்குள் நான் நுழைந்தது போன்று உணர்ந்தேன். உங்களுக்கும் அது பிடிக்கும் என நம்புகிறேன்” என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal