நடிகை கவுதமி திடீரென சென்னையில் மழை பெய்து கிளைமேட்டே மாறிய நிலையில், வெளியே வந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சென்னைக்கு மிக அருகாமையில் சூரியன் டென்ட் போட்டு அமர்ந்து விட்டாரா என ஏகப்பட்ட மீம்களை போட்டு வெயிலின் தாக்கத்தை பொறுக்கமுடியாமல் சென்னை வாசிகள் புலம்பித் தீர்த்தனர்.

இந்நிலையில், இன்று திடீரென மழை கொட்டித் தீர்த்த நிலையில், தர்ஷா குப்தா போன்ற இளம் நடிகைகள் மழையில் ஆடும் வீடியோக்களை போடுவார்கள் என்று எதிர்பார்த்தால், நடிகை கவுதமி மழையில் நனைந்து ரசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

காந்தி நகர் ரெண்டாவது வீதி எனும் தெலுங்கு படத்தின் மூலம் 1987ல் சினிமாவில் அறிமுகமான நடிகை கவுதமி தமிழில் ரஜினிகாந்த், பிரபு நடித்த குரு சிஷ்யன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அறிமுகமானார்.

கமல்ஹாசன் உடன் அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், நம்மவர், பாபநாசம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகை கவுதமி, ரஜினிகாந்த் உடன் குரு சிஷ்யன், பணக்காரன், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜயகாந்த், ராமராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள கவுதமி தென்னிந்திய மொழிப் படங்களிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

பாபநாசம் படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் இருந்து வந்த கவுதமி ஸ்டோரி ஆஃப் திங்ஸ் எனும் சோனி லைவ் வெப்சீரிஸில் நடித்திருந்தார். மேலும், நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் பான் இந்தியா படமாக வெளியான சாகுந்தலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சென்னையை சுட்டெரித்து வந்த வெயில் சட்டென்று மாறிய வானிலையாக மழையை இன்று தந்த நிலையில், நடிகை கவுதமி கருப்பு டிசர்ட், கருப்பு ஜிம் டிராக் உடையை அணிந்து கொண்டு மழையில் நனைந்து சந்தோஷமாக சிரிக்கும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக”What could be better than this!!” (இதை விட சிறப்பானதாக எது இருக்கு முடியும்) என பதிவிட்டுள்ளார். நடிகை கவுதமியின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal