Month: May 2025

எ.வ.வேலுவுக்கு ‘செக்’ வைத்த பொன்முடி!

மண்டலப் பொறுப்பாளர் எ.வ.வேலுவுக்கு பொன்முடி ‘செக்’ வைத்திருப்பதுதான் அறிவாலயத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த…

‘இ.டி.’ விசாரணை வளையத்தில் 2 டாஸ்மாக் அதிகாரிகள்!

‘டாஸ்மாக்’ நிறுவன பொதுமேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர். மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருப்பதாக,…

‘யார் அந்த 3வது நபர்..?’

‘‘எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம்’’ என ஆர்த்தி ரவி விளக்கம் அளித்துள்ளார். ரவி மோகன் – ஆர்த்தி ரவி…

உருவாகிறது ‘சக்தி’ புயல்..!

மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மே 25 முதல் 26-ல் புயலாக வலுப்பெறும். இதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மே…

சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!

தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் அனைத்து…

ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள், 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 14ம் தேதி ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்து கிடந்ததால் சிசிடிவி காட்சிகளை…

‘பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி!’ தமிழக பாஜக கோரிக்கை!

‘‘பிரிவினைவாத அரசியலுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு மட்டுமல்ல, மத்திய அரசும்…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ‘டாஸ்மாக்’ து.மேலாளர்!

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நுங்கம்பாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது; டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு…

‘யார் அந்த தம்பி?’ திமுக மீது அதிமுகவின் அடுத்த அட்டாக்!

தமிழக டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையின் விசாரணையில் இருந்து தப்பிய தொழிலதிபர் ரத்தீஷை, ‘யார் அந்த தம்பி?’ என கேள்வி கேட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக அடுத்த பிரசாரத்தை அ.தி.மு.க., துவக்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார். இது…