மண்டலப் பொறுப்பாளர் எ.வ.வேலுவுக்கு பொன்முடி ‘செக்’ வைத்திருப்பதுதான் அறிவாலயத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த புகைச்சலை அடக்க, எட்டாவது மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

‘சீனியர் அமைச்சர்களே எனது தூக்கத்தை கெடுத்தால் என்ன செய்வது?’ என மு.க.ஸ்டாலின் பேசியபோது சிரித்துக்கொண்டிருந்த பொன்முடி, தனது ‘வாய் பேச்சால்’ இன்றைக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை இழந்து இருக்கிறார்.

இந்த நிலை​யில், அவருக்கு பிடிக்​காத அமைச்​சர் எ.வ.வேலுவை வடக்கு மண்டல தேர்​தல் பொறுப்​பாள​ராக தலைமை அறி​வித்​தது. ஏற்​கென​வே, விழுப்​புரத்​தில் இருந்து பிரிக்​கப்​பட்ட கள்​ளக்​குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்​ச​ராக பொன்​முடியை தவிர்த்​து​விட்டு வேலுவை நியமித்​ததையே பொன்​முடி தரப்​பின​ரால் பொறுத்​துக்​கொள்ள முடிய​வில்​லை.

இதற்​கிடை​யில் வேலு​வின் வரு​கையை கொண்​டாடிய பொன்​முடிக்கு பிடிக்​காத விழுப்​புரம் மாவட்ட எம்​எல்​ஏ-க்​களும், கட்சி நிர்​வாகி​களும் வேலுவை சந்​தித்து வாழ்த்​துத் தெரி​வித்​தனர். விழுப்​புரம் எம்​எல்​ஏ-​வான லட்​சுமணன், செஞ்சி எம்​எல்​ஏ-​வான முன்​னாள் அமைச்​சர் மஸ்​தான் ஆகி​யோர் சுவர் விளம்​பரங்​கள், மற்​றும் போஸ்​டர்​களில் எ.வ.வேலு​வின் பெயரை​யும் படத்​தை​யும் பெரி​தாகப் போட்​டதுடன் பொன்​முடி​யின் படத்​தையோ பெயரையோ போடா​மல் இருட்​டடிப்பு செய்​தார்​கள்.

இதையெல்​லாம் பார்த்​து​விட்டு ஆவேசமான பொன்​முடி தரப்​பினர், கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தைப் போல​வே, விழுப்​புரத்​தை​யும் எ.வ.வேலு தனது கைக்​குள் கொண்​டு​போய் விடு​வாரோ என அச்​சப்​பட்​டார்​கள். வேலு நியமனம் தொடர்​பாக முதல்​வர் மற்​றும் துணை முதல்​வரிடம் தனது ஆதங்​கத்தை பொன்​முடி வெளிப்​படுத்​தி​ய​தாக​வும் சொல்​கி​றார்​கள். இதையடுத்​தே, கடலூர் கிழக்​கு, விழுப்​புரம், காஞ்​சிபுரம் தெற்கு மாவட்​டங்​களுக்​கான தேர்​தல் பொறுப்​பாள​ராக அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வத்தை நியமித்​திருக்​கிறது தலை​மை.

மண்​டலப் பொறுப்​பாளர்​களில் வன்​னியர் சமூகத்​திக்கு பிர​தி​நி​தித்​து​வம் இல்லை என்ற குறையைப் போக்​கவே எம்​ஆர்​கே-வை மண்​டலப் பொறுப்​பாள​ராக நியமித்​திருப்​ப​தாக​வும் சொல்​லப்​படு​கிறது. ஒரு காலத்​தில் எதிரும் புதிரு​மாக இருந்த எம்ஆர்​கே-​யும், பொன்​முடி​யும் அதி​முக வரவு​களான லட்​சுமணன் உள்​ளிட்​ட​வர்​களின் குடைச்​சலை சமாளிக்க தற்​போது கைகோத்​திருக்கிறார்கள்.

இதனிடையே, தேர்​தல் பொறுப்​பாள​ராக எம்​ஆர்கே நியமிக்​கப்​பட்​டதை வரவேற்று சுவர் விளம்​பரங்​களை தீட்​டிய பொன்​முடி ஆதர​வாளர்​கள், அவற்​றில் பொன்​முடி​யின் பெயரை​யும் பெரி​தாகப் போட்டு வரு​கி​றார்​கள். ஆக, தேர்​தல் வெற்​றிக்​காக அறிவிக்​கப்​பட்ட மண்​டலப் பொறுப்​பாளர்​கள் நியமனத்​தால் விழுப்​புரம் திமுக-வுக்​குள் கோஷ்டி பூசல் இன்னும் அதிகரித்திருக்கிறது.

தி.மு.க.வின் இந்த கோஷ்டிப் பூசலை அ.தி.மு.க.வின் சீனியரான சி.வி.சண்முகம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த ஆயத்தமாகிவருவதாகவும் தகவல்கள் வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal