Month: June 2024

நேற்று ஜாமீன்! இன்று ரத்து! அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில்,…

அப்பாவி உயிர்கள் பலி! ஐகோர்ட் எழுப்பிய கேள்வி..!

‘‘ கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு’’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., சார்பில்…

கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக…

கள்ளச்சாராய பலி! சட்டசபையில் அமளி! குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர், இன்று…

தமிழக மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் !!

ஒன்றிய அரசு, தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டிப்பதோடு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கண்டிப்பான நடவடிக்கையை மேற்கொண்டு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

கள்ளக்குறிச்சி சம்பவம் : பா.ஜ.க மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க. அரசை கடுமையாக சாடியுள்ளனர். இந்நிலையில்,…

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்! கணவன் படுகொலை!

கலிகாலத்தில் காலத்தில், கள்ளக்காதல் அதிகரித்து வருகிறது. ‘கூடா நட்பு கேடா’ முடியும் என்பது போல, கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடியும் என தெரிந்து எதற்காக இப்படி அலைகிறார்களோ தெரியவில்லை..! காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்கு…

நீட் முறைகேடு! ஜூன் 24ல் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜூன் 24-ல் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என…

குத்தகை முறையில் ஓட்டுநர் – நடத்துநர்! அன்புமணி கண்டனம்..!

தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

நாளை ராமநாதபுரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

நாளை (ஜூன் 20) ராமநாதபுரம் வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுநாள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு…